பாலாற்றை ஆக்கிரமித்து மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றை ஆக்கிரமித்து 20 க்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாலாற்றை ஆக்கிரமித்து மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உபயகேந்திரம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. ,  விண்ணமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முடிவடைந்த நிலையில், பாலாற்றிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக  பாலாற்றில் பணிகளுக்காக பாலாற்றை அரசே ஆக்கிரமிப்பு  செய்வதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆற்றில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தால், அது ஆறு பாயும் அனைத்து இடங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்