சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் சொத்து வரியை, 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு
x
தமிழகத்தில், 1998-ஆம் ஆண்டில் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் உள்ளதால், பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவு தொடர்பாக உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில்  உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதனையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, தற்போதைய வரியில் இருந்து 50 சதவீதம் வரை கூடுதலாக வசூலிக்கப்படவுள்ளது.வாடகை குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு, தற்போது செலுத்தப்படும் வரியில் இருந்து நூறு சதவீதம் வரை கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசாணையால்,  குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

Next Story

மேலும் செய்திகள்