வேண்டும் வரங்களை தரும் சத்யமங்கலம் பண்ணாரி அம்மன்

வேண்டும் வரங்களை தரும் சத்யமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலின் சிறப்புகளை பற்றி ஒரு தொகுப்பு..
வேண்டும் வரங்களை தரும் சத்யமங்கலம் பண்ணாரி அம்மன்
x
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில், தமிழக- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பன்னாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சத்யமங்கலத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.முன்பொரு காலத்தில் வனப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக, மக்கள் அழைத்துச் சென்றபோது, ஓரிடத்தில் பசு ஒன்று தானாகவே பாலினை சுரந்ததாகவும், அந்த இடத்தில் சுயம்புவாக சிலை ஒன்று இருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த மக்கள் அந்த இடத்தில் கோயில் கட்டி, பண்ணாரி அம்மனாக வழிபட்டு வருவதாகவும், இக்கோயிலின் தலபுராணம் கூறுகிறது.ஆண்டுதோறும் பங்குனிமாதம் நடைபெறும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலின் குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் தீமிதிக்கும், ஒரே கோயில் இதுதான்.

Next Story

மேலும் செய்திகள்