கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத சூழல் - தமிழக மீனவர்கள் வேதனை

இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆந்திர சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத சூழல் - தமிழக மீனவர்கள் வேதனை
x
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்களையும் அவர்களது படகுகளையும் அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்து சென்றனர். 

ஆந்திர அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரும் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பேசிய மீனவர்கள், இந்திய கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்தனர். 

ஆந்திர மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீட்டு தர வேண்டும் என அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்