பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை அறிமுகம் : சிம் இல்லாமல் செல்போன், லேப்டாப் மூலம் பேசும் வசதி
கடந்த ஆண்டு மட்டும் 27 லட்சம் புதிய சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் 27 லட்சம் புதிய சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார். சென்னையில் விங்ஸ் எனப்படும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி பேசிய அவர், 'விங்ஸ் சேவை' மூலம் சிம் கார்டு இல்லாமல் செல்போன் மற்றும் லேப்டாப் மூலம் வாய்ஸ் கால்கள் பேச முடியும் என்றும், இந்த சேவையை பெற ஆண்டு கட்டணமாக ஆயிரத்து 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டிலேயே பி.எஸ்.என்.எல். தான் இந்த திட்டத்தை முதல் முறையாக அமல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story