இதுவரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவு என்ன..?
மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இதுவரை கர்நாடகம், தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவு பற்றியும், தற்போது காவிரி ஆணைய உத்தரவுப்படி கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவு பற்றிய விவரங்கள்..
கடந்த 2016-17ஆம் ஆண்டு கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட வேண்டிய நீரின் அளவு 183 புள்ளி 8 டி.எம்.சி. ஆனால், தமிழகத்திற்கு கிடைத்த நீரின் அளவு 67 புள்ளி 4 டி.எம்.சி மட்டுமே.
இதேபோல், 2017-18ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவு 192 டி.எம்.சி. ஆனால், தமிழகத்திற்கு கிடைத்த நீரின் அளவு 116 புள்ளி 52 டி.எம்.சி. 2018-19 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு திறந்துவிடப்பட வேண்டிய நீரின் அளவு 177 புள்ளி 25 டி.எம்.சி.
கடந்த ஜூன் மாதம் 9 புள்ளி 19 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டிய நிலையில், 11 டி.எம்.சி கிடைத்துள்ளது. நடப்பு ஜூலை மாதம் 31 புள்ளி 24 டி.எம்.சி. வழங்க வேண்டிய நிலையில், தற்போது வரை சுமார் 40 டி.எம்.சி. நீர் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்டில் 45 புள்ளி 95 டி.எம்.சி.யும், செப்டம்பரில் 36 புள்ளி 76 டி.எம்.சியும், அக்டோபரில் 20 புள்ளி 22 டி.எம்.சியும், நவம்பரில் 13 புள்ளி 78 டி.எம்.சி.யும், டிசம்பரில் 7 புள்ளி 35 டி.எம்.சியும், 2019ம் ஆண்டு ஜனவரியில் 2 புள்ளி 76 டி.எம்.சி.யும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2 புள்ளி 50 டி.எம்.சி நீரும் வழங்க வேண்டும்.
Next Story