"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்வது எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, 243 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்வது எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, 243 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்த 243 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.பி.செல்வம், பஷீர்அகமது அடங்கிய அமர்வு, ஒரு சம்பவத்திற்கு இத்தனை வழக்குகள் பதிவு செய்வதா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்யவும் அவர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்ளை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story