யார் இந்த செய்யாதுரை? சேகர் ரெட்டியுடன் என்ன தொடர்பு?
நாகராஜன் செய்யாதுரை யார்...? அவரது பின்னணி என்ன...? - பிரத்யேக தகவல்கள்
செய்யாதுரை யார்...?
நாகராஜன் செய்யாதுரை மூன்று நிறுவனங்களில் இயக்குனராக இருந்து வருகிறார்
1. SPK Spinnerrs Pvt Ltd
2. Sri Balaji Tollways Madurai Pvt Ltd,
3. SPKANDCO Exprressway Pvt Ltd
* SPK Spinnerrs Pvt Ltd - நாகராஜனின் குடும்பத்தினரால் 1994 ஆம் தொடங்கப்பட்ட ஜவுளி நிறுவனம்.
* 2014 ஆம் ஆண்டு முதல் நாகராஜன் இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்துவருகிறார்.
* இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 2.25 கோடி.
* Sri Balaji Tollways Madurai Pvt Ltd- என்ற நிறுவனம் சேகர் ரெட்டி, சுப்ரமணியம் பழனிச்சாமி மற்றும் நாகராஜன் செய்யாதுரை ஆகியோரால் பத்து லட்சம் முதலீட்டில், பிப்ரவரி 26, 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்.
* துவங்கிய பத்து மாதத்தில் சேகர் ரெட்டி இந்நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார். ஜெயலலிதா மறைவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 2, 2016 ஆம் தேதி சேகர் ரெட்டி இயக்குனர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறார். அவர் வசம் இருந்த 34% பங்குகள் கூடுதலாக நாகராஜன் வசம் வருகிறது.
* 2016 ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு எந்த வருவாயும் இல்லை.
* 2017 - ஆம் ஆண்டு இந்நிறுவனம் 60,353 லாபம் ஈட்டுகிறது. அதுவும் வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
* பிப்ரவரி 23, 2018 - ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 52.25 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 52.35 கோடி
.
* SPKANDCO Exprressway Pvt Ltd - நிறுவனம் நாகராஜன் செய்யாதுரை மற்றும் அதே சுப்ரமணியம் பழனிசாமியால் பத்து லட்சம் முதலீட்டில் மார்ச் 12,2018 ஆம் தேதி துவங்கப்படுகிறது.
* இந்த மூன்று நிறுவனங்களின் தற்போதைய மதிப்பு 54.70 கோடி.
* ஆனால் நாகராஜன் தொடர்புடைய இடங்களிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதோ 170 கோடி ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்க கட்டிகள். இதன் பின்புலம் தான் வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.
Next Story