சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி...

சென்னை தனியார் மருத்துவமனையில், செயற்கை உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி...
x
வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்நிலையில், செயற்கை உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி ராசாத்தியம்மாள், மகனும், தி.மு.க செயல் தலைவருமான ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.  முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். சிகிச்சை முடிந்த நிலையில் மாலை 4 மணி அளவில் கருணாநிதி வீடு திரும்பினார். 




Next Story

மேலும் செய்திகள்