கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலய ஆடிமாத அபிஷேகம்

புதுச்சேரியில் உள்ள கெடங்கலி முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத முதல் நாள் சிறப்பு பூஜையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலய ஆடிமாத அபிஷேகம்
x
புதுச்சேரியில் உள்ள கெடங்கலி முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத முதல் நாள் சிறப்பு பூஜையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அம்மனுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முத்து மாலையம்மமன் கோவில் ஆடி கொடை விழா

திருச்செந்தூர் அருகே குரங்கனி முத்து மாலையம்மன் கோவில்ஆடி கொடை விழா 8 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் 
நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

வாணவேடிக்கைகளோடு நடைபெற்ற அன்னம்மாள் ஆலய கொடியேற்றம்

புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள் தேவாலயத்தின் 70ஆம் ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அருட்தந்தை ஜேம்ஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.பின்னர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கொடி
எடுத்து செல்லப்பட்டது. பின்னர் வாணவேடிக்கையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர் திருவிழா

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அய்யம் பிடாரி கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இரண்டு தேர்கள் இரவு நேரங்களில் ஊர் முழுவதும் சுற்றி வரும்.  விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர்-காந்திமதியம்மன் ஆடிப்பூரத்திருவிழா
நவதானியங்களை கொண்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜை 

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்று வருகிறது.10ஆம் நாளில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு முளை கட்டப்பட்ட நவதானியங்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அம்பாளுக்கு வளையல்கள்,  நவதானியங்களை வைத்து வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்