கருப்பு பணத்தை பதுக்கியது எப்படி? - வருமான வரி விசாரணையில் செய்யாதுரை விளக்கம்
163 கோடி ரூபாய் கருப்பு பணத்தையும், 100 கிலோ தங்கத்தையும் கணக்கில் காட்டாமல் பதுக்கியது எப்படி என்பது குறித்து SPK நிறுவன உரிமையாளர் செய்யாதுரை வருமான வரித்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை பதுக்கியது எப்படி?
SPK நிறுவனத்திற்கு தொடர்புடைய 10 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 163 கோடி ரூபாய் ரொக்க பணமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருவான வரித் துறை தெரிவித்துள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமல்லாது, டைரி, HARD DISK போன்ற ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. SPK நிறுவன உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் 24 லட்சம் ரூபாய் மட்டுமே பணம் இருந்ததாகவும், மற்றவை எல்லாம் அவரது நிறுவன ஊழியர்களின் வீடுகள் மற்றும் 2 சொகுசு கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை சேர்த்தது குறித்து செய்யாதுரை, விளக்கியதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக கணக்கு காண்பித்ததாகவும், தணிக்கையாளர் மற்றும் நகை கடைக்காரர்கள் மூலம் கருப்பு பணத்தை தங்கமாக மாற்றியதாகவும் செய்யா துரை கூறியுள்ளார்.
Next Story