பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : நோய் தொற்று ஏற்படும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவகழிவுகளால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : நோய் தொற்று ஏற்படும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தை சுற்றிலும் ரயில் நிலையம், பள்ளி கல்லூரிகள் என பல அம்சங்களும் அமைந்துள்ளன. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவ மாணவிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தில் ரத்த பரிசோதனை நிலையங்களில் அகற்றப்படும் கழிவுகள், ஊசிகள், மருந்து பாட்டில்கள், ஊசிகள் என மருத்துவ கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் மொய்க்கும் ஈக்கள், உணவு பண்டங்களில் நோயை பரப்புவதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  மாணவர்களும், பயணிகளும், ரத்தம் தொய்ந்த பஞ்சுகளையும் ஊசிகளையும் மிதிப்பதாலும் நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்