ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைத்த ஸ்டெர்லைட் நிர்வாகம்

ஸ்டெர்லைட் ஆலையின் நிரந்தர ஊழியர்கள் 960 பேருக்கும், இன்று முதல் தாமிரம் - 1, தாமிரம் - 2 ஆகிய குடியிருப்புகளுக்கு வந்து பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்யுமாறு ஆலை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைத்த ஸ்டெர்லைட் நிர்வாகம்
x
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இது தொடர்பான தமிழக அரசின் ஆணையை, எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் நிரந்தர ஊழியர்கள் 960 பேருக்கும், இன்று முதல் தாமிரம் -1, தாமிரம் - 2  ஆகிய குடியிருப்புகளுக்கு வந்து பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்யுமாறு ஆலை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களாக எந்தவித வருகை பதிவும் இல்லாமல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், அதை முறைப்படுத்தவே இந்த ஏற்பாடு எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், ஆலை ஊழியர்கள் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும், தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்