'4 ஆண்டுகளுக்கு' பிறகு கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:

கர்நாடகாவில் ஹாரங்கி,ஹேமாவதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
x
      கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையில், தற்போது நீர் இருப்பு 2 ஆயிரத்து 281 புள்ளி 27 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு, 40 ஆயிரத்து 400 கன அடியாக உள்ளதால், அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
         இந்நிலையில், கே.ஆர் எஸ். அணையின் மொத்த கொள்ளளவான 124 புள்ளி 8 அடியில் தற்போது நீர்மட்டம் 123 புள்ளி 43  அடியாக உள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 43 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்திற்கு விநாடிக்கு 60ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
        கர்நாடகாவில் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீர், கபினி, கே.ஆர்.எஸ்.  அணைகளுக்கு வருகிறது. இதனால் அங்கிருந்து மொத்தம் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
        அணை நீர்மட்டம் 83 புள்ளி 20  அடியை எட்டியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 45 ஆயிரத்து 316 கன அடியாக நீர்வரத்து உள்ளது.இந்நிலையில், பிற்பகலில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்