கிணறுகளில் தண்ணீர் இறைக்க புதிய முறை - சேலத்தில் அறிமுகம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் திறந்த வெளி கிணறுகளில் இருந்து புதிய முறையில் தண்ணீர் எடுக்கும் திட்டம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் திறந்த வெளி கிணறுகளில் இருந்து புதிய முறையில் தண்ணீர் எடுக்கும் திட்டம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திறந்த வெளி கிணறுகளில் மின்சாரம் இல்லாத பொழுது கயிறு மூலம் தண்ணீர் இறைக்க பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதனை சரிசெய்ய 10க்கும் மேற்பட்ட கிணறுகளில் தண்ணீர் இறைக்க, கிணறுகளின் விளிம்பில் கை பம்பு அரசு சார்பில் அமைக்கப்பட்டது. அதில் உள்ள கை பம்பை அடித்தால் தண்ணீர் மேலே வந்து விழுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story