நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு

சென்னை அருகே மப்பேடு கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு
x
திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், காமராஜர் பிறந்தநாளை ஒட்டி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகர், வட்டார கல்வி அலுவலர்கள் ராபர்ட் வில்லியம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் ஆசிரியர்கள் அனைவரும், நரிக்குறவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, 15 குழந்தைகளுக்கு மாலை அணிவித்து நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், பாட புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், சீருடைகள் கொடுத்து ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியில் சேர்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்