சிங்கங்களை அருகில் பார்க்கும் பயணம் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் திறப்பு
30ம் தேதி லயன் சபாரி மூடப்பட்டு புற்களை அகற்றி, சிங்கங்கள் இளைப்பாற தென்னங்கீற்று ஓலையுடன் கூடம் அமைக்கப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேனில் சென்று சிங்கங்களை நேரில் பார்க்கும் லயன் சபாரி வசதி இருந்தது. இந்த பகுதியில் அதிக அளவு புற்கள் வளர்ந்ததால் சிங்கங்களை பார்வையாளர்கள் பார்க்க முடியாத நிலை இருந்தது. இதனால் கடந்த 30ம் தேதி லயன் சபாரி மூடப்பட்டு புற்களை அகற்றி, சிங்கங்கள் இளைப்பாற தென்னங்கீற்று ஓலையுடன் கூடம் அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் இன்று மீண்டும் லயன் சபாரி தொடங்கப்பட்டது. பார்வையாளர்கள் வேனில் சென்று, சிங்கங்களை அருகில் பார்த்து ரசித்தனர்.
Next Story