நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்குவதை எதிர்த்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடத்துநர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பல பேருந்துகள், நடத்துநர் இல்லாமல், ஓட்டுநர் மூலம் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்குவது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், வரும் 18ஆம் தேதிக்குள் தமிழக அரசின் போக்குவரத்து செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
Next Story