"கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு"
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் வெளியிட்ட அறிவிப்பில், 24 ம் தேதி சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கும், 25 , 26 தேதிகளில் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறும் என்றும், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் மற்றும் தர வரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.