தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகளின் நீர்மட்டம்...
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதகரித்துள்ளது.
* மேட்டூர் அணையின் நீர்மட்டம் பத்து நாட்களில் 13 அடி அதிகரித்து 71 அடியாக உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 34 ஆயிரத்து 426 கன அடியாக உள்ளது.
* மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை கராணமாக தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 123 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 3 ஆயிரத்து 122 கன அடியாக உள்ளது.
* 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 48 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து ஆயிரத்து 30 கன அடியாக உள்ளது.
* சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123 கனஅடியாகவும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும் சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
* நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
* பாபநாசம் அணையின் நீர்மட்டம் 92 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81 அடியாகவும் உயர்ந்துள்ளது.
* அமராவதி அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 11 அடி அதிகரித்து 65 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 3 ஆயிரத்து 648 கனஅடியாக உள்ளது.
* பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
Next Story