தமிழகத்தில் யானைகளின் உயிரிழப்பு இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் யானைகளின் உயிரிழப்பு இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் யானைகளின் உயிரிழப்பு இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது
x
* தமிழக காடுகளில், கடந்த 2016-2017ஆம் ஆண்டில் மட்டும் 125 யானைகள் இறந்துள்ளன.

* இது, கடந்த 2015-2016ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 61 யானைகள் மட்டும் இறப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

* இறப்பு அதிகரித்து இருப்பதற்கு நோய் பாதிப்பும், யானைகளுக்கு இடையே ஏற்படும் மோதலும், காயங்களும், தவறி விழுவதன் மூலமும் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

* அதே நேரம், 2017-2018ம் ஆண்டில் யானைகளை வேட்டையாடியதாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

* இதேபோல், மின்வேலி தடுப்பு மூலம் யானைகள் இறக்கும் சம்பவங்கள், கடந்த 2015-2016ம் ஆண்டில் 6 ஆக இருந்தது,  2017-2018-ல் 10 ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்