அரசு தொடக்கப் பள்ளியில் ஆடல், பாடலுடன் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்

சேலம் மாவட்டம் குரல்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆடல் பாடலுடன் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு தொடக்கப் பள்ளியில் ஆடல், பாடலுடன் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்
x
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரல்நத்தம் கிராமத்தில் இயங்கிவருகிறது அரசு தொடக்கப்பள்ளி. இப்பள்ளி 1955 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் இருந்த இப்பள்ளியை ஆசிரியர் தெய்வநாயகம் என்பவர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியுள்ளார். 
 
இதனால் 50 மாணவர்களுக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயின்று வந்த இப்பள்ளியில் தற்போது 127 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பிற பள்ளிகளில் இருந்து இப்பள்ளியை தனித்துக்காட்டுவது, இங்குள்ள ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் முறை தான். ஆடியும், பாடியும் பாடம் கற்பித்து மாணவர்களை கவர்கிறார்கள்.

மாணவ, மாணவிகளும் ஆடிப்பாடி சலிப்பு தெரியாமல், விளையாட்டு போக்கிலேயே பாடம் கற்கிறார்கள். தமிழ் எழுத்துக்களையும் பாடல் மூலமே கற்று தருகின்றனர். பிற அரசுப்பள்ளிகளை போல இல்லாமல், இங்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி சிறப்பாக இருக்கிறது.

தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க திட்டமிட்டிருக்கும் பெற்றோர் கூட, இப்பள்ளியை பற்றி கேள்விப்பட்டு, அங்கே சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளி சிறப்பாக செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிக்கு தேவைப்படும் பீரோ, நாற்காலி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் சீர் வரிசையாக வழங்கி வருகின்றனர். அவ்வப்போது ஆசிரியர்களுக்கு விழா நடத்தியும் கௌரவப்படுத்துகிறார்கள். 


Next Story

மேலும் செய்திகள்