போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் - பேருந்து நிலையம் அமைத்து தர கோரிக்கை
கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படாததால், போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடலூர் நகரம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் பகுதியாக இருக்கிறது.
பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான வணிக வளாகங்கள் செயல்பட்டு வருவதால் இப்பகுதி எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது.
கூட்ட நெரிசலை தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலககத்தின் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், நாளுக்கு நாள் கடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதோடு, விபத்துகளும் அதிக அளவில் நடப்பதாக அந்நகரவாசிகள் புகார் கூறுகிறார்கள்.
விரைவில் புதிய பேருந்து நிலையத்தை அரசு அமைக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story