தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது - உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

போராட்டக்காரர்கள் மீது அரசு குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், மாநில காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தூத்துக்குடி கலவரம் தொடர்பான 20 நிமிட வீடியோ, முக்கிய ஆவணங்கள் உள்ளதாகவும், அதனை நீதிமன்றத்தில் காட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது, வன்முறையில் யார் ஈடுபட்டாலும் தண்டனைக்குரியவர்களே என தலைமை நீதிபதி தெரிவித்தார். அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்ததால் குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்றும், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வழக்கை சி.பி.ஐ.க்கு ஏன் மாற்றக் கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், தூத்துக்குடி கலவரம் தொடர்பான வீடியோ மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story