'எய்ம்ஸ்' அமையும் இடத்தில் மத்திய அதிகாரிகள் ஆய்வு
3 நாளில் அறிக்கை அளிக்க இருப்பதாக தகவல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்டு உள்ள 197 ஏக்கர் நிலத்தை மத்திய கட்டுமானக் குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சுற்று எல்லையை பார்வையிட்ட அவர்கள், மண், தண்ணீர் மற்றும் மின்சார வசதி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, 3 நாளில் ஆய்வறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டி, கோட்டாட்சியர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story