இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார் - நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாஜக நிர்வாகிகளை சந்தித்து, அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், தேர்தலுக்காக 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திரமாக பிரிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களையும், மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக, அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை, தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவரின் வருகை கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story