மலைவாழ்மக்கள் குழந்தைகளை மெரினாவிற்கு அழைத்து வந்த எம்.எல்.ஏ
மலைவாழ் மக்கள் குழந்தைகளின் சுற்றுலா ஆசைக்கிணங்க அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் மெரினாவிற்க்கு அழைத்து வந்து மகிழ்ச்சி படுத்தியுள்ளார்.
* வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பெண் குழந்தைகள் அணைக்கட்டுவில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வருகின்றனர். அண்மையில் அங்கு சென்ற திமுகவை சேர்ந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமார், மாணவிகளுடன் உரையாடிய போது அவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்ற ஆசை கூறியுள்ளனர்.
* உடனே அதிகாரிகளுடன் பேசி நேற்று அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து உள்ளனர். சாலை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள், அதைவிட்டால் பள்ளி என்று இருந்த குழந்தைகள் ஆனந்தமாக மெரினாவில் விளையாடி மகிழ்ந்தனர்.
* ஆசிரியர்களுடன் முதல் முறையாக சுற்றுலா வந்த 55 பெண் குழந்தைகள் அளவிள்ளா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த பகுதிகளில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு மற்றவர் போல் வசதிகள் கிடைக்காத காரணத்தால் சொந்த ஏற்பாட்டில் அழைத்து வந்ததாக கூறுகிறார் அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் நந்தகுமார். 3 மணிநேரம் மெரினாவில் சுற்றுலா, எம்.எல்.ஏ விடுதியில் தங்கியது என சுவையான அனுபவத்துடன் திரும்பி சென்றனர் குழந்தைகள்.
Next Story