காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி - கொலை செய்ய கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர்

காதலிக்க மறுத்த மாணவியை கல்லூரியில் புகுந்து கொலை செய்ய முயன்ற ஜிம் பயிற்சியாளரை மாணவர்களே மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி - கொலை செய்ய கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர்
x
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்   சென்னை மாநிலக் கல்லூரியில் பிகாம் முதலலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற இளைஞர் ஒருவர் அந்த மாணவியை கத்தியால் கொல்ல முயன்றுள்ளார். அவரை சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் பேசியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால், மாணவர்கள் சிலர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து  அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும் அந்த மாணவியும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு தன்னுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக பேச வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்