சட்டக் கல்லூரி இடமாற்றத்தால் மாணவர் உரிமை மீறப்படவில்லை - தமிழக அரசு

இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் அரசு தரப்பு திட்டவட்டம் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாக அரசு தகவல்
சட்டக் கல்லூரி இடமாற்றத்தால் மாணவர் உரிமை மீறப்படவில்லை - தமிழக அரசு
x
* சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதால் மாணவர்களின் எந்த உரிமையும் மீறப்படவில்லை என  உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்த வழக்குகள், நீதிபதி கிருபாகரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. 

* அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நாட்டில் பல முன்னணி சட்டக் கல்லூரிகள், உயர்நீதிமன்றத்தில் இருந்து வெகுதூரத்தில் தான் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டி வாதிட்டார்.  

* மேலும், கல்லூரியை இடமாற்றம் செய்வதால் மாணவர்களின் எந்த உரிமையும் மீறப்படவில்லை என்றும், புதிய வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாகவும் தலைமை வாதிட்டார்.

* மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை,  காஞ்சிபுரத்தில் அமைய உள்ள கல்லூரி வளாகத்தில் இருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பேருந்து நிறுத்தம் இருப்பதாகவும், 14 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் நிலையம் அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார். 

* இதனை​த் தொடர்ந்து வரும் திங்களன்று புது கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்யும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்