தமிழக மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு விதிமீறல்கள்
தமிழகத்தில் 200 மருத்துவமனைகளில், தீ பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தமிழக அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது.
* சென்னையில் 100 மருத்துவமனைகளிலும், பிற மாவட்டங்களில் 100 மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரவாரியம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
* அப்போது, சுமார் 90 சதவீத மருத்துவமனைகள், தீ பாதுகாப்பு விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. அதன் படி, சென்னையில் சில மருத்துவமனைகளில், தீ விபத்து பாதுகாப்பு கருவிகள் பழுதடைந்திருப்பது, தெரிய வந்துள்ளது.
* பெரும்பாலான மருத்துவமனைகள் தீ பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை என்றும், அவசர கால மீட்புத் திட்டம், தீ விபத்து நடந்தால் நீர் தெளிப்பான் உள்ளிட்ட இதர பாதுகாப்பு கருவிகளை நிர்மாணம் செய்ய மருத்துவமனைகள் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் தெரிகிறது.
* உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மூன்று மாதத்திற்குள் அனைத்து மருத்துவமனைகளும் நிறுவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story