இயற்கை முறையில் திருமணம் நடத்திய தம்பதியர் - பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது
திருப்பூரில் இயற்கையான முறையில் நடந்த திருமணம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
திருப்பூரை சேர்ந்த லோகேஷ்வரன் மற்றும் ரித்திகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் திருமண நிகழ்வை வித்தியாசமாக நடத்திக் காட்ட வேண்டும் என அவர்கள் விரும்பினர். அதன்படி இயற்கையான முறையில் தங்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என விரும்பிய அவர்கள், மழை நீரை சேமித்து வைத்து அதை திருமணத்திற்கு வந்தவர்களுக்கு குடிக்க கொடுத்தனர்.
மேலும் இயற்கையான முறையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை கொண்டே திருமண விருந்தை தயார் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மக்காச்சோள தட்டுகள், சில்வர் பாத்திரங்களையே பயன்படுத்தினர். பெண் வீட்டார் சார்பில் காங்கேயம் இன பசு மற்றும் அதன் கன்றுக்குட்டியும் சீதனமாக கொடுக்கப்பட்டது. மாறுபட்ட சிந்தனையுடன் திருமணத்தை நடத்திய இவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Next Story