மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிட கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை விதிமுறைகளை பின்பற்றி திறக்க உத்தரவிட கோரிய வழக்கு, வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிட கோரிய வழக்கு ஒத்திவைப்பு
x
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜூநாகுலு என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,  மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகள் வைத்துள்ள தங்களிடம் வாடகை வசூலிக்கும் கோயில் நிர்வாகம், முறையான பாதுகாப்பு வசதிகளை செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் கோயில் முழுவதும் தலா ஒரு காவலர், எலெக்ட்ரீசியன் மட்டுமே பணியில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என்றும், விபத்து ஏற்பட்ட போது எலெக்ட்ரீசியன் பணியில் இருந்திருந்தால் மின் இணைப்பை துண்டித்து விபத்தை தடுத்திருக்கலாம் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதால், மீனாட்சியம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள கடைகளுக்கு குன்னத்தூர்சத்திரம் பகுதியில் மாற்று இடம் தருவதாக கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை, வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்