ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது?

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர் அளித்த தகவலும், அப்பல்லோ நிர்வாகம் அளித்திருந்த தகவலும் வேறுபட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது?
x
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர் அளித்த தகவலும், அப்பல்லோ நிர்வாகம் அளித்திருந்த தகவலும் வேறுபட்டுள்ளது.

* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனையில் எக்கோ கருவியை இயக்கி வரும் நளினி என்பவர், இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

* கடந்த 2016, டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் இதயம் செயலிழந்த பின்னர் தான் தன்னை மருத்துவர்கள் அழைத்தார்கள் என்றும், ஆணையத்தில் நளினி கூறியதாக தெரிகிறது. 

* ஜெயலலிதாவின் அறைக்கு தான் செல்லும் போது, மசாஜ் மூலம் மீண்டும் இதயத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் தான் எக்கோ கருவியைப் பொருத்தி பார்த்த போது, அவரின் இதயம் செயலிழந்து காணப்பட்டதாகவும் நளினி தெரிவித்தாக கூறப்படுகிறது. 

* அப்போது குறுக்கிட்ட விசாரணை ஆணைய வழக்கறிஞர்கள்,  டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருப்பது குறித்து, நளினியிடம்  கேள்வி எழுப்பினர்.

* அதுகுறித்து தனக்கு தெரியவில்லை என்றும், மூத்த மருத்துவர்கள் யாரேனும் அவ்வாறு சொல்லியிருக்கலாம் என்றும் நளினி பதில் அளித்ததகாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்