புதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்
தமிழக அரசு அறிமுக செய்யப்பட்ட புதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்..
சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் ஏசி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பேருந்தில், 975 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை - திண்டுக்கல் இடையே, கழிவறை வசதியுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில், 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஓட்டை - உடைசல் பேருந்துகளுக்கு விடை கொடுத்து விட்டு, தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக படுக்கை மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய 515 அதி நவீன பேருந்துகள், தமிழகத்தில் உலா வருகின்றன. இந்த புதிய பேருந்துகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இதன்படி, ஏசி படுக்கை வசதி பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் வீதமும், குளிர் சாதன வசதி அல்லாத படுக்கை வசதி பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு தலா 1 ரூபாய் 55 காசும் வசூலிக்கப்படும். இதேபோல, அல்ட்ரா டீலக்ஸ் ஏசி இருக்கை வசதி பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் 30 காசும், ஏசி வசதி அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
Next Story