திடீரென குடியிருப்பு வளாகத்தை முற்றுகையிட்ட 200 மாணவிகள் - ஆவடியில் பதற்றம்

x

திடீரென குடியிருப்பு வளாகத்தை முற்றுகையிட்ட 200 மாணவிகள் - ஆவடியில் பதற்றம்

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு அருகே தனியார் கலை கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியின் அருகே அமைந்திருக்கும் தனியார் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கல்லூரிக்குள் புகுந்து வருகிறது.

இதனால் அவதியடைந்த கல்லூரி மாணவிகள், இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகம், தனியார் குடியிருப்பு நிர்வாகிகளிடம் இது குறித்து கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தனியார் குடியிருப்பு வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, குடியிருப்பு நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் முற்றுகை போராட்டத்தால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்