குப்பையில் கிடந்த 20 கிராம் தங்கம் - கிடைத்த கையோடு பணியாளர் செய்த சம்பவம்

x

சென்னையில், குப்பையில் கிடந்த 20 கிராம் தங்கம் மற்றும் 9,500 ரூபாய் பணத்தை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் நேர்மை, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.184வது வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பவுல்ராஜ், கரீம் நகரில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​20 கிராம் தங்கம் மற்றும் 9,500 ரூபாய் பணம் அவர் சேகரிக்கும் குப்பையில் இருந்துள்ளது. உடனடியாக உயரதிகாரிகளுக்கு அவர் இதுகுறித்து தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் தங்கம் மற்றும் பணம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்