"போலீசால முடிலனு எழுதி தர சொல்லுங்க சார்"காணாமல் போன 2 மகன்கள் -கதறி துடிக்கும் தாயின் பாசபோராட்டம்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், காணாமல் போன 2 மகன்களை கண்டுபிடித்து தரக்கோரி, தாயார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரை மனுத்தாக்கல் செய்ததாக தாயார் தெரிவித்தார். மேலும் 2 சிறுவர்களும் கடலில் மூழ்கி பாறைகளின் இடையே சிக்கயிருக்கலாம் என போலீசார் கூறுவதாகவும், 25 நாட்கள் ஆகியும் மகன்களை மீட்காததால், தங்களால் முடியாது என போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதித்தர வேண்டும் என்றும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்