2 லாரியில் வந்த மெடிக்கல் வேஸ்ட் - செய்தியாளர்களைக் கண்டதும் எஸ்கேப் ஆன ஊழியர்கள்

x

திருவள்ளூர் தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளே தரம் பிரிக்காமல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவக் கழிவுகளைக் கொட்ட வந்த நகராட்சி ஊழியர்கள் செய்தியாளர்களைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

திருவள்ளூரில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் தான் கொட்டப்படுகின்றன. சுமார் 50 ஆயிரம் டன்னிற்கும் மேலாக மலை போல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் தரம் பிரிக்காமல் மேலும் மேலும் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை 2 லாரிகளில் ஏற்றி வந்த நிலையில், ஒரு லாரி முழுமையாகக் கொட்டப்பட்டு, அது தெரியாமல் இருப்பதற்காக ஜேசிபி எந்திரத்தை வைத்து அதன் மேல் குப்பைகளை போட்டு மறைக்கப்பட்ட நிலையில், மற்றொரு லாரியை கொட்ட முற்பட்ட போது செய்தியாளர்களைக் கண்டதும் நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து வேக வேகமாகப் புறப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்