மருத்துவமனையில் இருந்த 2 குழந்தைகள்.. திடீரென்று காணாமல் போனதால் அதிர்ச்சி.. வெளியான சிசிடிவி காட்சி
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது கடத்தப்பட்ட இரு குழந்தைகள், வாலாஜாபாத் அருகே மீட்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மூர்த்தி என்பவரின் மனைவி 2-வது பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலயில், அவருடைய 3 வயது மகன் சக்திவேலும், அண்ணன் மகளான 7 வயது சௌந்தர்யாவும், மருத்துவமனயில் இருந்து 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார்கள். இதுகுறித்து போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரித்ததில், 50 வயது பெண் ஒருவர், இரு குழந்தைகளையும் அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், வாலாஜாபாத் அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தில், ஒரு பண்ணை நிலத்தில் 2 குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. குழந்தைகளை மீட்ட போலீசார், குழந்தைகளை வைத்திருந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்ற லட்சுமி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவியாக இருந்ததால் பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் வேண்டுகோள் விடுத்தார்.