17ம் தேதி சென்னையில் 17000 போலீசார்... - வெளியான முக்கிய தகவல்
வருகிற 17ம் தேதி காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். இதையொட்டி, 15 ஆயிரத்து 500 காவல் அதிகாரிகள், சுமார் ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் மூலம் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள், உயர் கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் உதவியுடன் கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளன. பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்க வாகன சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story