அடுத்தடுத்து மோதிய 12 வாகனங்கள் - ராணுவ வீரர் பலி... 10க்கும் மேற்பட்டோர் காயம் | Accident
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில், 12 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். குருபரப்பள்ளியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், பொய்கை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன் என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story