இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-08-2023)
சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டண உயர்வு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது...அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆவணப் பதிவு தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் விளக்கம்...
அமைச்சர் செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவில் விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை...ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி, அதிகபட்சம் 9 மணி நேரம் விசாரணை நடைபெறுவதாக தகவல்...
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை தீவிரம்...ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை விசாரணை... 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை...
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதி...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிபந்தனை விதித்திருந்தால், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்திருக்கும்...அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை...
உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான சின்னத்தை வரும் 10ம் தேதி வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்....சென்னையில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் நிலையில் சின்னம் வெளியீடு...
மாநிலங்களவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் எம்.பி., டெரிக் ஓ பிரைன்...மீண்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி...
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது...மக்களவையில் திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு...
பிரதமர் மோடியை அவைக்கு வரவழைக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை...மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு...
மத்தியில் 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக 9 மாநிலங்களில் ஆட்சியை தான் கலைத்திருக்கிறது...
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசார விவாதம்...
ராகுல் காந்தி எம்.பி-க்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கீடு...
ராகுல் காந்தியின் 2-வது பாரத் ஜோடோ யாத்திரை குஜராத்தில் தொடங்குகிறது...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி சென்றடைந்தார்...