100 நாள் வேலையில் கை வைத்ததா மத்திய அரசு? - தீயாய் பரவிய ஷாக் தகவல் உண்மையா?

x

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிராமப்புற வேலைவாய்ப்பு நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 16 சதவீதம் குறைந்துள்ளது என்று ஊடகங்களில் வெளியான செய்திக்கு ஊரக வளர்ச்சி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்கும் வகையில், கடந்த 2005-ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேவை சார்ந்த திட்டம் என்பதாலும், நடப்பு நிதியாண்டு நடைமுறையில் இருப்பதாலும், மனித வேலை நாட்கள் உருவாக்கம் குறித்த சரியான இலக்கை நிர்ணயிப்பது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநிலங்கள் தங்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர் நிதி ஒதுக்கீட்டுத் திருத்தத்திற்கான முன்மொழிவை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக இதுவரை இல்லாத அளவில் அதிக நிதியாக, நடப்பு நிதியாண்டில் 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்