கொத்தாக சிக்கிய 100கிலோ கெட்டுப்போன இறைச்சி..அதிகாரிகளே அதிர்ந்து போன சம்பவ
உணவு விடுதிகளில் பழைய உணவு பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கும்,
பொதுமக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் மற்றும் கொடைக்கானல் நகராட்சி பொதுசுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, கவி தியாகராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், காலாவதியான இறைச்சி சிக்கன், பீஃப் மற்றும் சாதம், சப்பாத்தி மாவு, உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
விடுதி உரிமையாளர்கள் 20 பேருக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
Next Story