40 நாட்களில் 10 புலிகள் மரணம்..! வனத்துறை அதிகாரிகளின் அலட்சியம்.. சுற்றுச்சூழல் ஆர்வலர் காட்டம்

x

நீலகிரியில் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாள்களில் 10 புலிகள் உயிரிழந்தன. குறிப்பாக 6 புலிக்குட்டிகள் உயிரிழந்த நிலையில், அவற்றின் தாய்ப்புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, புலிகளின் இறப்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்கு ஆர்வலர்களுக்கு வனத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணையின் போது புலிகள் குறித்து நீங்கள் எப்படி பேசலாம் எனக் கேட்டதாக கூறப்படும் நிலையில், விலங்கு ஆர்வலர்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்