10 நிமிட மழையால் பெரும் பாதிப்பு - "எங்களால முடியல" கதறும் மக்கள்

x

'சென்னையை அடுத்த தாம்பரம், மாதம்பாக்கம் சுதர்சன் நகர் முதல் பிரதான தெருவில் கடந்த 2 மாதங்களாக வெறும் 10 நிமிடம் மழை பெய்தால் கூட மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது... மழைநீர் கால்வாய் தூர்வாரப் படாததால் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசி கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது... கழிவுநீரில் கால் வைக்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்... இப்பகுதிக்கு ஆட்டோக்களும் டாக்சிகளும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வருவதற்குத் தயாராக இல்லை. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என குமுறும் மக்கள், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்