10 நிமிடம் பிரேமலதா செய்த செயல்.. விஜயகாந்த் சமாதியில் கதறி அழுத மகன்கள் - கலங்க வைக்கும் காட்சிகள்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உருவப்படத்துக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோன்று, கோயம்பேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடிகர் தாடி பாலாஜி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், இரு மகன்கள், மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட உறவினர்கள், விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வருகை தந்து, மலர்களை தூவியும் ஆரத்தி காண்பித்தும் 10 நிமிடத்திற்கு மேல் அமர்ந்து மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற அனைவருக்கும் விஜய பிரபாகரன் ஆறுதல் கூறினார். பின்னால் வந்த இளைய மகனையும் தொண்டர்கள் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து, அஞ்சலி செலுத்த வருகை தந்த பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story