1லட்சம் முன்னாடி.. 5 லட்சம் பின்னாடி..ஒற்றை நோட்டால் மாறிய வழக்கை

x

திருப்பூர் மாவட்டம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக ஆனந்த் என்பவர் உள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம், ஆலை விரிவாக்கப் பணிக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 6 லட்சம் ரூபாய் கேட்டு, ஒரு லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதி பணத்தை தொடர்ந்து கேட்டு வந்த‌தாகவும் தெரிகிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ராதாகிருஷ்ணன் புகார் அளித்த‌தால், ரசாயணம் தடவிய பணத்தை கொடுக்க வைத்துள்ளனர். ராதாகிருஷ்ணனிடம் இருந்து பணத்தை வாங்கும் போது, ஆனந்தை கையும் களவுமாக போலீசார் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்