":இது அரசு இடம்.. நொறுங்கிய கனவு வீடு" - கன்னியாகுமரியில் மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த துயரம்
கன்னியாகுமரி அருகே அரசு இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த மாற்றுத்திறனாளியின் வீடு இடிக்கப்பட்டதால், அந்நபர் பயணிகள் நிழற்குடையில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் கடந்த 1986-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், வட்டக்கோட்டை சந்திப்பு அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் இவரது வீட்டை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இடித்துள்ளனர். இதனால், இவர் வேறு வழியின்று அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் வசித்து, அங்கிருப்பவர்கள் வழங்கும் உணவை உண்டு வருகிறார். இவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், அரசு சார்பில் வீடு ஒன்று வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story