பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்த விக்கிரகங்கள் எடுத்து செல்லும் நிகழ்வு-அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து, திருவனந்தபுரத்துக்கு சாமி விக்கிரகங்கள் மற்றும் உடைவாள் எடுத்து செல்லப்பட்டது. நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்வில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், குமரி எம்.பி., விஜய் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, தமிழக அதிகாரிகளிடம் இருந்து கேரள அதிகாரிகளிடம் உடை வாள் கைமாற்றப்படும் நிகழ்வும் நடைபெற்றது.
Next Story